சென்னை சாலைகளில் `ஹார்ட்டின்' வடிவில் ஒளிரும் டிராபிக் சிக்னல்கள்
சர்வதேச ட்ராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் ஹார்ட்டின் வடிவில் விளக்குகள் ஒளிர்ந்தன. 1914ஆம் ஆண்டு இதே நாளில் முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் அமெரிக்காவில் பொருத்தப்பட்டது. இதனையொட்டி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5ஆம் தேதி போக்குவரத்து சிக்னல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை உட்பட பிரதான சாலைகளில் உள்ள சிக்னலில் ஹார்ட்டின் வடிவில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது கவனம் பெற்றது.
Next Story