கழிவறையில் சிக்கிய கால்.. 10 வயது சிறுமிக்கு வந்த சோதனை

x

தாம்பரம் அருகே, கழிவறையில் கால் சிக்கியதால் தவித்த 10 வயது சிறுமியை, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிட்லப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி, பள்ளி செல்ல தயாராகும் வகையில் கழிவறை சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவறையில் கால் சிக்கியுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கழிவறையை உடைத்து சிறுமியை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்