சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த பரிசு

x

"Zero accident day"வை முன்னிட்டு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

சென்னையை போக்குவரத்தில் சிறப்பாக மாற்ற 'ஜீரோ ஆக்சிடென்ட் டே' என்ற முயற்சி சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் ஜீரோ ஆக்சிடென்ட் டே கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இதை முன்னிட்டு சென்னை எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கப்பட்டது...

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு, பள்ளி பூங்கொத்துடன் இலவசமாக தலைகவசத்தை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் பதியப்படும் வழக்குகளில் 90 சதவீதம் வழக்குகள் தலை கவசம் அணியாததால் தான் என்று குறிப்பிட்டார்...

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களில் தலைகவசம் அணியாத வழக்குகள் 70 சதவீதம் என்றும்,

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவதை கடைப்பிடிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டிய அவர்

இதனை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்...

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம் தலைக்கவசங்கள் இலவசமாக இன்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்