செய்வதறியாது நின்ற வெளிநாட்டு பயணிக்கு தெய்வமாய் வந்த இன்ஸ்பெக்டர்

x

சென்னை வந்த வெளிநாட்டு பயணியான ஹரீஷ் மோகன் தனது பணப்பையை தொலைத்துவிட்டு பதற்றத்தில் இருந்தார். அதில் வெளிநாட்டு பணம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தன. தொலைந்து அவரது பணப்பை போரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வசம் கிடைத்தது. ஹரீஷ் மோகனின் செல்போன் எண்ணை அதில் கண்டறிந்து அவரை நேரில்அழைத்து பணப்பையில் இருக்கும் தகவல்களை குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையில் பணப்பை ஹரிஷ் மோகன் உடையது என்பது உறுதியானதால், அதனை அவரிடமே ஒப்படைத்தார். மனிதநேயத்துடன் ஆய்வாளர் ஜெயக்குமார் செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்