`சென்னையில் கண்ணுக்கு தெரியாமல்'... இருவரால் வெளிவந்த திகில் ரகசியம்... ஹை அலர்ட்டில் போலீசார்

x

சென்னையில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கிய இளைஞர்கள் இருவர், ட்ரக் மாஃபியாவின் மாஸ்டர் ப்ளானை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

குட்கா, கூலிப், கஞ்சாவில் தொடங்கி... போதை ஊசிகள் வரை இளைஞர்களை ஆட்டுவித்து வரும் டிரக் மாஃபியா.. தற்போது நூதனை முறையில் இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது....

இதன் அடிப்படையில் அண்ணா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்துக்கிடம் அளிக்கும் வகையில் அங்கு சுற்றித் திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்திருக்கின்றனர்...

இதில், இருவரிடமிருந்தும் சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் வகை போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

விசாரணையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவர, இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர்...

காவல் நிலைய விசாரணையில், கிண்டர் ஆப் மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனடிப்படையில் போதைப்பொருள் வாங்க வந்ததாகவும் கூறி இருவரும் பகீர் தெரிவித்திருக்கின்றனர்...

எவ்வளவு போதை பொருள், எங்கு வரவேண்டும், எவ்வளவு விலை என அனைத்தும் ஆப் மூலமே பேசப்படுவதாகவும், இதனடிப்படையில் அடையாளம் தெரியாத இளைஞர் வந்து டெலிவரி செய்வதாக இருவரும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

டிரக் மாஃபியாக்களின் இந்த நூதன ஊடுருவல் போலீசாரை மேலும் அலர்ட்டாக்கி இருக்கும் நிலையில், இருவரிடம் இருந்தும், மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகளுடன், போதை ஊசி செலுத்தும் சிரிஞ்சிகளையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்