சென்னையின் பிரபல கம்பெனியில் திருமணமான பெண்களுக்கு வேலை மறுப்பு? - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு
ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலையில் மணமாகாத பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக
ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து
வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை அளிக்க மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலருக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலருக்கும் உத்தரவிட்டுள்ளது.
Next Story