விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர் திடீர் மரணம்.. உடற்கூராய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்... சென்னையில் பரபரப்பு சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் மாவட்டம் கசிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். கவுன்சிலரான இவர்... வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், விசாரணைக்காக செவ்வாய்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட சாந்தகுமார் கடந்த 13 ஆம் தேதி போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை போலீசார் பணியிடை நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. சாந்தகுமாரை போலீசார் திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம்சுமத்திய உறவினர்கள், தொடர்ந்து அவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவருடன் சென்னை ஆவடி காவல் ஆணையரகம் வந்த சாந்தகுமாரின் மனைவி, கணவரின் உட்ற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகாரளித்தார்.