விருந்துக்கு அழைத்த பெண் - ஆசையாக சென்ற செல்போன் கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜாவித் சைபுதீன், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில், தாம் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். தன்னுடன் செல்போனில் பழகிய பெண் கடந்த 17-ஆம் தேதி வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த நிலையில், அங்கு சென்றபோது தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். அந்த கடத்தல் கும்பல் 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதால், தனது சகோதரர்களை எடுத்து வரச் சொல்லி அந்த கும்பலிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த கும்பல், 18-ஆம் தேதி மாலை, சேத்துப்பட்டு அருகே இறக்கி விட்டுச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். போலீசில் புகார் கொடுத்தால் வீடு தேடி வந்து கொலை செய்வதாக அந்த கும்பல் மிரட்டியதால் அச்சத்தில் இத்தனை நாட்களாக புகார் கொடுக்கவில்லை என்றும் அந்த புகாரில் ஜாவித் தெரிவித்துள்ளார். அவருடைய புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்