முதியோர்கள் தினம் கேக் வெட்டி கொண்டாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் | ADMK

x

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தில், முதியோர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பா.பெஞ்சமின், எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி முதியோர்களை புகழ்ந்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்