சிறிய எலக்ட்ரிக் கடைக்கு ஜிஎஸ்டி வரி ரூ. 22.29 கோடி..! அதிர்ச்சியில் உறைந்த கடைக்காரர் | Chennai
ஆவடி அருகே 22 கோடியே 29 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை கட்டுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டதில் அதிர்ச்சியடைந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்
செவ்வாபேட்டையை சேர்ந்த இளைஞர் மகேந்திர குமாருக்கு, 22 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரத்து 722 ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கட்டுமாறு சமீபத்தில் நோட்டீஸ் வந்துள்ளது. சிறிய அளவில் எலக்ட்ரிக் கடை நடத்தி வரும் அவர், இத்தனை கோடி வரியா? என்று அதிர்ந்துள்ளார். உடனடியாக வழக்கறிஞரை அழைத்து ஜி.எஸ்.டி. கணக்கு விபரங்களை ஆய்வு செய்த போது, ஜி.எஸ்.டி. கணக்கோடு இணைக்கப்பட்ட பான் கார்டு மகேந்திர குமாருடையது என்றும் வங்கி கணக்கு மற்றொருவரது என்றும் தெரியவந்துள்ளது. மகேந்திர குமார் பான் எண்ணை வைத்து ஜி.எஸ்.டி. வரி மோசடி நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ள மகேந்திரன், 2019-ல் சென்னை ஜி.கே.எம். காலனியில் பூஜா மொபைல் கடையில் பணியாற்றிய போது பான் விபரங்களை கொடுத்திருந்ததாகவும், அதை மொபைல் கடை உரிமையாளர் தவறாக பயன்படுத்தி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.