கழனி தொட்டியில் தண்ணீர் ஊற்றியதும் உள்ளே இழுத்த `POWER' - இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்
மலையம்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த மின் மோட்டாரின் மின் இணைப்பு துண்டிக்கப்படாத நிலையில், அந்த பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண், அங்கிருந்த தொட்டியில், மாட்டிற்கு தண்ணீர் ஊற்றச் சென்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சசி என்ற பெண் மீதும் மின்சாரம் பாய்ந்து அலறினா. அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் ஊற்றும் பொழுது திடீரென ஏற்பட்ட மின்கசிவால் இருவருக்கும் மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது.
Next Story