சென்னை அப்பார்ட்மெண்ட் வீட்டில் சடலமாக தஞ்சை சிறுமி - உடலை பார்த்ததும் கிளம்பிய சந்தேகம்

x

சென்னை அப்பார்ட்மெண்ட் வீட்டில் சடலமாக தஞ்சை சிறுமி - உடலை பார்த்ததும் கிளம்பிய சந்தேகம்

சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் குளியல் அறைக்குச் சென்ற சிறுமி, நீண்ட நேரமாக கதவை திறக்காததால் இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி யாரிடமும் அவர் தகவல் தெரிவிக்காமல், நேற்று பிற்பகலில் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அமைந்தகரை போலீசார், சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சிறுமியின் சடலத்தில் காயங்கள் இருப்பதால், வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சிறுமியுடன் பணியாற்றிய சிலரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்