கஞ்சா வார் : நண்பனுக்காக சண்டைக்கு சென்ற 18 வயது இளைஞர்... சுற்றி வளைத்து கொத்தி கூறு போட்ட கும்பல்
முடிச்சூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி என்ற இளைஞர் தாக்கி கஞ்சா மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், முடிச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் வைத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து சூரியகாந்தியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி இருக்கிறார் சந்தோஷ். அப்போது, சூரிய காந்தியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி சந்தோஷையும், அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்த நிலையில், சந்தோஷ் தரப்பினர் தப்பியோடியுள்ளனர். இதில், சந்தோஷின் நண்பரான விக்னேஷ் என்பவர் மட்டும் சூரியாகாந்தியின் தரப்பினரிடம் சிக்கிக் கொண்டதில், 18 வயது இளைஞரான அவரை கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது. சம்பவ குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.