தெருநாய்கள் கணக்கெடுப்பு.. சென்னையில் மட்டும் இவ்வளவா?.. அதிர்ச்சி ரிப்போர்ட்

x

சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 81 ஆயிரமாக அதிகரித்துள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கென பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டு தெருநாய்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதற்கான அறிக்கையை, அந்நிறுவனத்தின் இயக்குனர் கார்லெட் ஆனி பெர்னான்டஸ், மாநகராட்சி மேயர் பிரியாவிடம் சமர்ப்பித்தார்.

சென்னையில் தெருநாய் கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது, ஆலந்தூர், மணலி, தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில், தெருநாய்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதேநேரம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்தமாக தற்போது ஒரு லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்