ஆர்டர் போட்ட 'ஷூ' கிடைக்காத ஊழியர் கன்னத்தில் பளார் விட்ட போயஸ் கார்டன் முதியவர்..
ஆர்டர் போட்ட 'ஷூ' கிடைக்காத ஊழியர் கன்னத்தில் பளார் விட்ட போயஸ் கார்டன் முதியவர்.. அதிர்ச்சி சிசிடிவி
7 ஆயிரம் ரூபாய் காலனி ஆர்டர் செய்து கொடுக்க காலதாமதமானதால் கடையின் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய முதியவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த 70 வயதான சலீம் என்பவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் காலனி ஷோரூமுக்கு புதிய ஷூ ஒன்று வாங்க சென்றுள்ளார். அவர் கேட்ட 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஷூ அவருக்கு பிடித்து விடவே கடை ஊழியர் சரவணனை அணுகி எனக்கு இதே போன்று வேறு ஒரு கலரில் வேண்டுமென கூறி உள்ளார். அவர் ஆர்டர் செய்து 2 நாட்களாகியும் ஷூ வராததால் ஆத்திரம் அடைந்த சலீம் கடைக்கு சென்று ஊழியரை சரமாரியாக தாக்கினார். தட்டி கேட்ட மற்றொரு ஊழியரையும் அவர் கண்ணத்தில் அறைந்த சிசிடிவி வெளியாகி உள்ளது. இதுகுறித்து புகாரளித்து 20 நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கபட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.