தாயின் கண்முன்னே பேச்சு மூச்சுஇல்லாமல் கிடக்கும் சுட்டிக் குழந்தை...சென்னையையே உலுக்கிய ஒற்றை வீடியோ

x

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் 3 வயது சிறுவனின் உயிர்பலியும், உறவினர்களின் குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் போராடும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்தான் இது... இத்தனைக்கும் தாயின் கண்முன்னே...

சென்னை, ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமாறன்...

திருமணமாகி இரு மகன்கள் இருந்த நிலையில், மனோஜ் என்பவரின் பண்ணை வீட்டில் தங்கி கார் ஓட்டுநராகவும், காவலாளியாகவும் பணிபுரிந்து வந்திருக்கிறார்..

இந்நிலையில், அந்த பண்ணை வீட்டில் இருந்த நீச்சல் குளம்தான் சுகுமாறனின் இளைய மகனான 3 வயது சிறுவன் ரிதீஷின் உயிரை பறித்திருக்கிறது..

அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த ரிதீஷ், எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்திருக்கிறார்..

மகனை காணவில்லை என தேடிய தம்பதி, இறுதியில் அவரை நீச்சல் குளத்திற்குள் சிறுவன் மிதப்பதை கண்டு பதறிப் போயிருக்கிறார்கள்..

மகனை தூக்கி கொண்டு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் ஓடியதில் சிறுவனின் உயிர் பறிபோயிருக்கிறது...

ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நம்ப மறுத்த தம்பதி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கின்றனர்..

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதன் பிறகே குழந்தை இறந்தை நம்பி இருவரும் கதறி அழுத நிலையில், ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முறையான வசதிகள் ஏதும் இல்லாததால் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனதாக குற்றம் சுமத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது..

ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில்... போதுமான வசதிகள் இல்லாததால், வெறுமனே முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்ததில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றனர் உறவினர்கள்...

சிறுவனின் உயிர்பலியும், உறவினர்களின் இந்த குற்றச்சாட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

ஈஞ்சம்பாக்கம், ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் விபத்துக்கள் நடைபெறுவதால் எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகளுக்கும் சென்னையை நோக்கியே செல்ல வேண்டும் என்ற சூழலில், உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றை ஈஞ்சம்பாக்கத்தில் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்