சென்னையில் துணை நடிகைக்கு பாலியல் வன்முறை.. -சிக்கிய பிரபல நடிகரின் டிரைவர்..

x

ஹைதராபாத்தை சேர்ந்த துணை நடிகை ஒருவர் வளசரவாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியுள்ளார். துணை நடிகையின் அத்தை சொந்த வேலை காரணமாக ஹைதராபாத் சென்றதால், துணை நடிகை, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், துணை நடிகையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து, வளசரவாக்கம் காவல்நிலையத்தில், துணை நடிகை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநர் உட்பட ஆறுபேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்