தமிழகத்தில் தீயை பற்ற வைத்த மகாவிஷ்ணு.. நீண்ட நாள் கேள்விக்கு கிடைத்த விடை.. கைகாட்டிய HM.. சிக்க போகும் பெரும் தலை

x

சென்னை, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் எழுந்த சர்ச்சையில்... மகா விஷ்ணுவை இரு பள்ளிகளுக்கும் அழைத்து வந்தது, அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் தமிழரசிதான் எனக் கூறப்பட்டது...

ஆனால், விசாரணையில் இது குறித்தான உறுதியான ஒரு நிலைப்பாடை கல்வித்துறை அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை..

காரணம், மகா விஷ்ணுவை அரசு பள்ளிக்கு அழைத்து வந்தது யார் ? என்ற கேள்விக்கு... இரு பள்ளி ஆசிரியர்களும் தங்களுக்கு ஏன் வீண் வம்பு என்ற நோக்கில், தெரியாது என்பதை மட்டுமே பதிலாக தருவதாக தகவல் வெளியானது..

இதனால், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனால், விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதமானது...

தமிழரசியை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய கண்ணப்பன், 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி கெடு வழங்கி உத்தரவிட்டார்...

இந்நிலையில், பல பக்கங்களில் விளக்கமளித்து இரு நாள்களுக்கு முன் கடிதம் அளித்திருந்தார் தமிழரசி ...

இதில், தமிழரசி வாய்மொழியாக ஒரு தகவலை கூறி இருந்ததாகவும், தற்போது எழுத்துப்பூர்வமாக அவர் வேறு தகவல்களை கூறி இருப்பதாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது...

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாநாட்டில், மாவட்ட முதன்மை கல்வி அலுவர் வழிகாட்டுதலில் தான் நிகழ்ச்சி நடந்ததாக வாய்மொழியாக தமிழரசி கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது...

இந்நிலையில், எழுத்துப்பூர்வமாக அவர் சமர்ப்பித்த கடிதத்தில் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது...

இவ்வாறு, மாறுபட்ட தகவல்களை கூறியிருப்பதால் விளக்கத்தை ஏற்க மறுத்து கடிதத்தை பள்ளி கல்வித்துறை இயக்குநர் நிராகரித்ததாவும், தொடர்ந்து உண்மையான தகவல்களை கூற வேண்டும் என தமிழரசி கண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது...

இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழரசி...

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரிலேயே, மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாக சொல்லி, கல்வித்துறை செயலர் மதுமதியை சந்தித்து தமிழரசி அழுது புலம்பியதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்