"ரூ. 6 ஆயிரம் கட்டினால் 10 கிராம் தங்க நாணயம்..!" - சென்னையை அதிர வைத்த மெகா ஸ்கேம்
ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து தங்க நாணய முதலீடு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வந்துள்ளார். அதன் படி மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதம் கட்டினால், ஒரு கிராம் தங்க நாணயம் அளிக்கப்படும் என கூறி ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்றதாக கூறப்படுகிறது. அதே போன்று மாதம் பத்தாயிரம் முதலீடு செய்தால், ஆறு மாத முடிவில் 10 கிராம் தங்க நாணயம் அளிக்கப்படும் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறி முதலீடுகளை பெற்றுள்ளனர். ஆனால் சசிகலா சொன்னது போல தங்க நாணயத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் ராணிப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கு சரியான நடவடிக்கை எடுக்காததால், டிஜிபி அலுவலகத்தில் ஏராளமானோர் புகாரளிக்க குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story