சென்னை சாலை பணிகள் - முதல்வர் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில், சாலைகளின் நிலை மிக மோசமாக உள்ளதாக புகார்கள் வருவதாகவும், பல்வேறு துறைகளின் பணிகள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, கள ஆய்வில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் இன்று, பெருங்குடி மண்டலம் ராம் நகர் பகுதியில் சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். அதேபோல் மணப்பாக்கம், எம் ஜி ரோடு நெடுஞ்சாலை, ராமாபுரம் - திருவள்ளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும், சாலை பணிகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
Next Story