காந்தியும், அம்பேத்கரும் படத்தின் பூஜை விழா - தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ரோஜா

x

காந்தியும், அம்பேத்கரும் குறிப்பிட்ட ஒரு ஜாதிக் காண தலைவர்கள் கிடையாது, இந்தியாவிற்கான தலைவர்கள் என்று, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆர்கே.செல்வமணி இயக்க உள்ள காந்தி யும் அம்பேத்கரும் என்ற குறும்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் ஆர்கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டு பூஜையை தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் செல்வமணி, அம்பேத்கர் தலித் மக்களுக்காக மட்டும் போராடினார் என்று கூறுவது, தவறு என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்