பயங்கர சத்தத்துடன் கொட்டிய மழை.. சென்னையில் குளுகுளு கிளைமேட்
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில், இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் அண்ணாசாலை, கிண்டி, வடபழனி,
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் நெடுஞ்சாலை, கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டையில் இடியுடன் கனமழை பெய்தது. இதேபோல, ஓஎம்ஆர் சாலை, நாவலூர், கேளம்பாக்கம், தாழம்பூர், மற்றும் திருப்போரூர்,கோவளம் முட்டுக்காடு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.