ஒரே இரவில் அடையாளம் தெரியாமல் மாறிய சென்னை.. திக்குமுக்காடிப்போன மக்கள்

x

ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வெப்பச்சலன மேகங்கள் உருவாகியுள்ளன. இதனால் வட தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய கனமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பல்லாவரம், முடிச்சூர், பம்மல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அம்பத்தூர், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால் போரூர்-ராமாபுரம் சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்