சென்னைக்கு ரெட் அலர்ட்.. மற்ற மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் டிராக்டர்கள் - ஏன்? எதற்கு?

x
  • சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் சென்னை நோக்கி செஞ்சி விவசாயிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கனமழையின்போது, மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற மோட்டர் பொருத்திய 500 வாகனங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது டிராக்டர் வாகனத்தில் நீர் உறிஞ்சி வெளியேற்றும் மோட்டாரை பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் மோட்டர் பொருத்திய டிராக்டர்கள் செஞ்சி பகுதியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக, மோட்டரை பொறுத்தும் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் கடைகாரர்கள் தெரிவித்தனர். மோட்டாரை பொறுத்த 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்