டமால் டுமீல்.. நள்ளிரவு முதல் சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை | Chennai Rain

x

சென்னையில், இன்று அதிகாலையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில், இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், இன்று காலை 7 மணிவரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,

திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்