பயணிகள் கவனத்திற்கு.. மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரை இணைக்கக் கூடிய போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாள் தோறும் வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story