ரேஸ் கிளப்பில் மும்முரமான வேலைக்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் மறுப்பு
சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர் நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு,
ரேஸ் கிளப்பின் சில வாயில்களை சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அங்கு உள்ள கோல்ஃப் மைதானத்தில் குளங்கள் தோண்டும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
கோல்ஃப் மைதானத்தை சேதபடுத்த தமிழக தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி,
மனுவுக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.