சென்னையில் தோழிகள் கண்முன்னே துடிதுடித்து பலியான கல்லூரி மாணவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல். 22 வயதான இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி எம்.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் ஒன்றுக்கு தனது தோழிகளுடன் சென்று சம்பவத்தன்று சுகைல் நடனமாடியதாக கூறப்படுகிறது. நடனத்திற்கு நடுவே பப்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு பின்னர் மீண்டும் நடனமாடிய சுகைல், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story