சென்னையில் பொது கழிப்பிடத்தை இடித்த தனிநபர் - போராட்டத்தில் இறங்கிய மக்கள்
சென்னை ஈ சி ஆர் சாலை, வெட்டுவான்கேணியில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தை கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில் அந்த நிலம் எனக்கு சொந்தமானது என்று தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்து, போலீசார் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் முன்னிலையில் அக்கழிப்பிடத்தை இடித்து தள்ளினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.
Next Story