சென்னையின் பிரதான ஹாஸ்பிடல் யாருக்கு சொந்தம்? - அடித்து கொள்ளும் 2 டாக்டர்களின் மனைவிகள்
சென்னையை அடுத்த மதுரவாயலில் 24 மணி நேர தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை நாகராஜன், அரவிந்த் என்ற மருத்துவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர் அரவிந்த் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து மருத்துவமனையை நிர்வகிப்பது தொடர்பாக அரவிந்தின் மனைவியும் மருத்துவருமான நிவேதனாவுக்கும், நாகராஜனுக்கும் மோதல் ஏற்படுள்ளது. இதுதொடர்பாக நாகராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று நிவேதனா குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவமனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் நிவேதனா தெரிவித்தார்.
Next Story