வீட்டின் முன் கிடந்த எலுமிச்சை பழம், கோழி ரத்தம் - சென்னையில் பரபரப்பு
சென்னை, நெசப்பாக்கத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் பூசாரியாக இருப்பவர் நீலகண்டன். இவர் பூஜைக்கு பயன்படுத்திய எலுமிச்சை பழம், கோழி ரத்தம் போன்ற பொருள்களை, அருகில் வசித்து வரும் முருகன் என்பவரது வீட்டு பக்கத்தில் தொடர்ந்து வீசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகனின் மனைவி மற்றும் அவரது மகன்கள் என குடும்பத்தோடு சேர்ந்து நீலகண்டனை தாக்கியுள்ளனர். இதில், இரு தரப்பினரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பூசாரி நீலகண்டன் அளித்த புகாரின் பேரில், இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story