சென்னையை அலறவிட்ட மாஸ்டர் மைண்ட் தெளஸா கும்பலை - கொத்தாக தூக்கிய போலீஸ்
- தடயங்கள் ஏதும் இல்லாததால் சுமார் ஒன்றரை மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதே போன்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தானில் இருந்து கூலி வேலைக்கு வந்திருப்பதாகவும், அவசர தேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் பணம் தேவை எனக்கூறி போலி நகைகளை அடகு கடைக்காரர்களிடம் அடமானம் வைத்து மோசடி செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. மோசடி பணத்தை ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு சென்று செலவழித்து விட்டு, பின் மீண்டும் ரயில் மூலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வந்து தங்கியதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். 7 பேர் கொண்ட தெளஸா கும்பலில் நால்வரை கைது செய்திருக்கும் மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 50 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story