சென்னையில் சித்தப்பா பையன் செய்த கேவலமான செயல் - 19 வயது பெண் எடுத்த முடிவு.. அதிர்ந்துபோன குடும்பம்

x

சென்னை மதுரவாயலை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரது சித்தப்பா பையனான முகமது ரிஸ்வான் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் மும்பை சென்ற முகமது ரிஸ்வான், இளம்பெண்ணை வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்து வருமாரும், அவ்வாறு செய்யவில்லை என்றால் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அவரின் பேச்சைக்கேட்டு இளம் பெண்ணும், வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த ஜுன் மாதம் 24ஆம் தேதி மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என இளம் பெண்ணின் குடும்பத்தினர் ஜுன் 28ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தனது மகள் மும்பையில் இருப்பதை தெரிந்து கொண்ட பெற்றோர், அங்கு சென்று மகளை மீட்டனர். மீட்டு வந்த அடுத்த நாளே இளம் பெண் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து பெற்றோர் விசாரிக்கையில், மும்பையில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, முகமது ரிஷ்வான் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. முகமது ரிஷ்வான் தற்போது தெலங்கானாவில் உள்ளார். அவரை பிடிக்க மதுரவாயல் போலீசார் விரைந்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்