பார்முலா 4 கார் ரேஸ் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த காவலர் - நேரில் அஞ்சலி செலுத்திய அதிகாரிகள்

x

ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்புப் பணியின்போது, மாரடைப்பால் உயிரிழந்த உதவி காவல் ஆணையர் உடலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண், ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உதவி ஆணையர் சிவக்குமாரின் உடலுக்கு, சென்னை காவல் ஆணையர் அருண், ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். அப்போது, முதலமைச்சர் அறிவித்த நிவாரணமான 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சென்னை காவல் ஆணையர் அருண், சிவக்குமார் குடும்பத்தினரிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்