சென்னை கல்லூரி மாணவி எடுத்த முடிவு - ஹாஸ்பிடலில் தந்தை.. அதிர்ச்சியில் உறைந்த தாய்
தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜூவன். 19 வயது இளம் பெண்ணான இவர், பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே, அருகில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் தந்தை உடல் நலம் சரியில்லாமல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால், பெண்ணின் தாய் மருத்துவமனையிலே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், வீட்டில் தனியே இருந்த மாணவி, மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் சடலகத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story