பல்லவன் எக்ஸ்பிரஸில் பயணியை கடுமையாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர் - வெளியான அதிர்ச்சி வீடியோ
சென்னையில் இருந்து மதுரை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணியை டிக்கெட் பரிசோதகர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. முன்பதிவு பயணப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் பாலகிருஷ்ணன் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பயணி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், அவரை பாலகிருஷ்ணன் வேகமாக தட்டி எழுப்பி சோதனையில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில்
பாலகிருஷ்ணன் ரயில் பயணியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
Next Story