கலவர பூமியான கல்லூரி ஹாஸ்டல்.. ரத்தம் சொட்ட சொட்ட வடமாநில மாணவர்கள்.. இடையே பயங்கர மோதல்..
திருவள்ளூர் அடுத்த செங்காடு பகுதியில் கடல்சார் தனியார் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடல்சார் கப்பல் படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி உள்ள உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநில மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது, 15-க்கும் மேற்பட்டோர் கையில் கிடைத்த இரும்பு கம்பி, கட்டை, பாட்டில்களை கொண்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்ததுடன், கை, கால் மார்பில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாண்வர்கள் ரத்தம் சொட்ட சொட்ட திருவள்ளுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய போலீசார் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.