சென்னையில் பகீர் சம்பவம்.. வடமாநில கும்பலின் தில்லாலங்கடி ஆட்டம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த இளைஞர்

x

யுபிஐ செயலி மூலம் நடைபெற்ற நூதன மோசடியில் இருந்து, சென்னையை சேர்ந்த இளைஞர் வங்கி கணக்கில் போதுமான பணமில்லாததால் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த இளைஞரை அணுகிய வடமாநில நபர், செல்போனை வாங்கி யாரிடமோ பேசியுள்ளார். பின்னர் அந்த இளைஞரை தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், வடமாநிலத்தை சேர்ந்தவர் ஊருக்கு வர பணமில்லாமல் தவித்து வருவதாகவும், தான் அனுப்பும் பணத்தை அவரிடம் தருமாறும் கூறியுள்ளார். அப்போது, இளைஞரின் வங்கி கணக்கில் 4 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் மீண்டும் இளைஞரை தொடர்புகொண்ட மர்மநபர், கூடுதலாக பணம் அனுப்பிவிட்டதாகவும், 3 ஆயிரம் ரூபாயை வடமாநிலத்தவரிடம் கொடுத்துவிட்டு, ஆயிரத்து 200 ரூபாயை திரும்ப அனுப்புமாறும் கூறியுள்ளார். உடனே இளைஞரும் அந்த தொகையை திரும்ப அனுப்ப முயல, வங்கி கணக்கில் போதுமான இருப்பு இல்லை என குறுஞ்செய்து வந்துள்ளது. சந்தேகமடைந்த இளைஞர், மர்மநபரை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டுள்ளார். உடனே மர்மநபர், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அப்போதுதான் மர்மநபர் தன்னை ஏமாற்ற முயன்றது இளைஞருக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்