சென்னைக்கு புதிதாக 28 மெட்ரோ ரயில்கள்.. ஓகே மட்டுமே சொன்ன மத்திய அரசு | Chennai Metro Rail

x

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டத்தில் ௫௪ கிலோ மீட்டர் தொலைவுக்கு, தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4இல் இருந்து 6ஆக உயர்த்த, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. 2 ஆயிரத்து 820 கோடி ரூபாய் மதிப்பில், 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்தது. நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிதித் துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதால், சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடன் உதவி பெற்று மெட்ரோ ரயில்களை தயாரித்து பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்