பாலில் கலக்கப்பட்ட மர்மப்பொருள் -முதியவருக்கு சகோதரிகள் போட்ட ஸ்கெட்ச்...திருமண ஆப் மூலம் வந்த வினை

x

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 60 வயதான ஆனந்தன் என்பவர், மனைவி இறந்த நிலையில், இரண்டாவது திருமணத்திற்காக மேட்ரிமோனியில் விவரங்களை பதிவேற்றியுள்ளார். அதனைப் பார்த்து தொலைபேசியில் தொடர்புகொண்ட பெண், தனது பெயர் சரண்யா என்றும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னைக்கு வந்த பெண்ணை, ஆனந்தன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் அந்தப் பெண் போட்டுக் கொடுத்த தேநீரை அருந்திய ஆனந்தன், சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்து தூங்கியுள்ளார். காலையில் கண்விழித்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 15 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மதுரையை சேர்ந்த சரண்யா மற்றும் அவரது சகோதரி முத்துலெட்சுமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்ததுடன், 15 சவரன் நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்​தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்