திருமணம் செய்ய மறுத்த காதலி...அடுத்த நொடியே யோசிக்காமல் காதலன் செய்த காரியம் - சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் காதல் தோல்வியால், டெம்போ ட்ராவலரை திருடிச்சென்ற கேரள இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்த அப்துல் ஜலில், சென்னையை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சென்னையில் காதலி பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்ற அவர், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிறுவனத்தின் பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்பு மீண்டும் டெம்போ ட்ராவலர் ஒன்றை திருடிக் கொண்டு, காதலியின் நிறுவனத்திற்கு அப்துல் ஜலில் சென்றுள்ளார். டெம்போ ட்ராவலரின் உரிமையாளர் தந்த புகார் அடிப்படையில் போலீசார் அப்துல் ஜலிலை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்