"எங்கள் பொழப்பே இந்த கடலை நம்பித் தான் இருக்கு" - வேதனையில் குமுறும் லூப் சாலை மீனவர்கள்
"எங்கள் பொழப்பே இந்த கடலை நம்பித் தான் இருக்கு" - வேதனையில் குமுறும் லூப் சாலை மீனவர்கள்
சென்னை மெரீனா லூப் சாலையில் மீண்டும் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி, நொச்சிக்குப்பம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மெரினா லூப் சாலையோரம் மீன் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, அந்த சாலையிலேயே நீதிமன்ற உத்தரவுப்படி 14 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது. இதையடுத்து, சாலையோரம் மீன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, புதிய மீன் அங்காடியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் அப்பகுதி மக்கள் மீன் வியாபாரம் செய்யத் தொடங்கினர். இதனால், தற்காலிக கடைகள் அமைத்து மீன் விற்பனை செய்யும் மீனவர்களும் சாலையோரம் மீன் விற்பனை செய்யக் கூடாது என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கடலுக்கு பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு லூப் சாலையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.