சென்னையில் பாலியல் தொழில்... யாரும் அறியா மறுபக்கம்? - வெளிச்சத்திற்கு வந்த உண்மை

x

ஜாம்பஜாரில் உள்ள விடுதி ஒன்றில், இருவர் கத்தியை காட்டி மிரட்டி, ஒருவரையொருவர் கொலை செய்ய முயல்வதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மதுபோதையில் தகராறு செய்த பாலகிருஷ்ணன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், அதனால் பெண்களுடன் உல்லாசமாக இருக்க விடுதிக்கு வந்ததாகவும் இருவரும் உளறிக் கொட்டி இருக்கின்றனர். இதனடிப்படையில் விடுதியில் நடத்திய சோதனையில், 4 பெண்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட விடுதியை குத்தகைக்கு எடுத்து மூவர் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும், பெண் பாலியல் தரகர் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாலியல் தொழிலுக்காக பெண்கள் வரவழைக்கப்படுவதாகவும் நால்வரும் வாக்குமூலம் அளித்தது போலீசாரை அதிரச் செய்தது. உடனடியாக, விடுதியின் வரவேற்பாளர் மாரியப்பனை கைது செய்த போலீசார், விடுதியை ஒப்பந்தம் எடுத்திருக்கும் மூவரையும், பாலியல் தொழிலுக்கு பெண்களை சப்ளை செய்த பெண் பாலியல் தரகரையும் தேடி வருகின்றனர். மேலும், போலீசார் தேடி வரும் மூவரும், இதேபோல் சென்னையில் பல விடுதிகளை ஒப்பந்தம் எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக பகீர் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்