13 வயது சிறுமி எடுத்த முடிவு.. தூக்கத்தை தொலைத்த போலீஸ்.. மீட்ட பின் தெரிந்த பகீர் காரணம்
அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அன்வா் உசேனின்,13 வயது மகள் தஸ்மீத் தம்சம், படுக்கையில் இருந்து எழுந்திருக்க தாமதமானதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகார் குறித்து விசாரித்த கேரள காவல்துறை, சிறுமி ரயில் ஏறிச் சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர், சிறுமியை மீட்க சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரை கேரள காவல்துறை நாடியது. இதையடுத்து எழும்பூர் ரயில்நிலையத்தில் சிசிடிவிகளை ஆய்வு செய்த போது, ஐந்தாவது பிளாட்பாரத்தில் இறங்கி நான்காவது பிளாட்பாரம் வழியாக சிறுமி நடந்த சென்ற காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
Next Story