சென்னையில் இருந்து இந்த மாவட்டத்துக்கு சிறப்பு ரயில் - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

x

சரஸ்வதி பூஜை ,விஜயதசமி விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு 6 முன்பதிவு இல்லா பெட்டிகள் 10 முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கபடவுள்ளது. இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு குமரி சென்றடையும். அதேபோல் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ரயில் இயக்கப்படவுள்ளது. மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்