பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த சிலிண்டர் லாரி - சென்னையில் பரபரப்பு
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில், கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பம்மல் பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் அவ்வப்போது வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி, பம்மல் மண்டல அலுவலகம் அருகே பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முடிக்கப்பட்ட பணிகளில் பள்ளங்களை சரியாக மூடி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story