சென்னையை உலுக்கிய கொலையில் திடீர் திருப்பம்.. கணவன், மனைவியின் பழைய வரலாறை பார்த்து அரண்ட போலீஸ்
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மயிலை சிவ மூர்த்தி தெருவை சேர்ந்த தம்பதி பார்த்தீபன் - சங்கீதா. இருவரும் தங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டி விஜயாவை கொன்று நகை மற்றும் பணம் கொள்ளையடித்த நிலையில், மூதாட்டியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சென்னை அடையாற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இருவரும் வாடகைக்கு வீடு தேடுவதுபோல், சென்னையின் பல தெருக்களில் மூதாட்டிகளை குறி வைத்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வயதானவர்களால் கத்தி கூச்சலிடவும், துரத்தியும் வர முடியாது என்பதால் அவர்களை கத்தியால் தாக்கி தம்பதி கைவரிசையில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக சென்னை அசோக் நகர் மற்றும் திருவான்மியூர் காவல்நிலையங்களில் இருவர் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.