பிப்.5 முதல் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், வழக்குகளின் விசாரணை காணொலி வாயிலாகவும் நடத்துவதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி முதல் காணொலி வாயிலாகவும் வழக்குகள் விசாரணையை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வசதியை, வழக்கு தொடர்புடைய வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story