தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

x

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்காக கோரப்பட்ட டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், சட்ட விதிகளுக்கு முரணாக போலி ஆவணங்களை சமர்ப்பித்த ஒரு புதிய சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்கவிடாமல் தடுத்ததுடன், புதிய சங்கத்துக்கு டெண்டரை இறுதி செய்ய அரசு அவசரம் காட்டி வருவதால், இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தங்கள் நிறுவனத்தின் டெண்டரை ஏற்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்