சென்னையில் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட 180 இடங்கள் - எந்தெந்த இடங்கள் தெரியுமா?..உஷார் மக்களே
பருவமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் மழைநீர் வடிகால் 45 இடங்களில் இணைப்பு பணிகள் முடியாததால், அவற்றை உடனடியாக முடிக்க அறிவுறுத்தியுள்ளது. வெள்ள அபாயம் உள்ள 180 இடங்களை கண்காணிப்பதோடு, கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதிகளில் 25 இடங்கள் மழைநீர் தேங்குவதாகவும், அங்கு கூடுதல் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பெருங்குடி, அடையாறு உள்பட எட்டு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணி நிறைவு பெறாமல் இருப்பதாகவும் அந்த பகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்தவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Next Story